1. Home
  2. தமிழ்நாடு

முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ் தலைவாஸ்!!

முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ் தலைவாஸ்!!

புரோ கபடி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

லீக் போட்டிகள் முடிவில் டாப் 2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பல்தான் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரையிறுதியில் விளையாடுகின்றன.

3ஆவது இடத்தை பெங்களூரு புல்ஸ் (74 புள்ளி), 4ஆவது இடத்தை உ.பி. யோத்தாஸ் (71 புள்ளி), 5ஆவது இடத்தை தமிழ் தலைவாஸ் (66 புள்ளி), 6ஆவது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி (63 புள்ளி) பிளே-ஆப் சுற்றுக்கு வந்தன.


முதல்முறையாக அரையிறுதிக்குள் நுழைந்த தமிழ் தலைவாஸ்!!

பிளே-ஆப் சுற்று மும்பையில் தொடங்கியது. இதில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த பெங்களூரு அணி, டெல்லியை எளிதில் வீழ்த்தியது.

இரண்டாவதாக நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

இதில் தமிழ் தலைவாஸ் அணி 2-3 என்ற கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

newstm.in

Trending News

Latest News

You May Like