1. Home
  2. தமிழ்நாடு

அறிவியல் கண்காட்சியில் திடீரென வெடித்த ராக்கெட்!!

அறிவியல் கண்காட்சியில் திடீரென வெடித்த ராக்கெட்!!

கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் வெடித்ததில் மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் கட்ஸில்லா என்ற பகுதியில் உள்ள கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ - மாணவிகள் தங்கள் படைப்புகளை அனைவர் முன்பும் செய்து காட்டினர்.

அப்போது ஒரு மாணவியும் - மாணவனும் தாங்கள் கண்டுபிடித்த ராக்கெட் ஒன்றை அனைவர் முன்பும் காட்சி படுத்தினர். மேலும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விளக்கினர்.

அப்போது அவர்களை சுற்றி சக மாணவர்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ராக்கெட்டின் கேபிளை ஒன்றாக சேர்ந்தபோது, திடீரென அந்த ராக்கெட் வெடித்தது.


அறிவியல் கண்காட்சியில் திடீரென வெடித்த ராக்கெட்!!


அதில் மாணவர்கள் உட்பட அருகில் சுற்றி வேடிக்கை பார்த்த சக மாணவர்கள் என மொத்தம் 11 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த கல்லூரி நிர்வாகம் அவர்கள் அனைவரையும் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ராக்கெட் வெடித்தது தொடர்பான வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது போன்ற செயல்களில் ஈடுபடும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like