1. Home
  2. தமிழ்நாடு

மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசிய ஆசிரியர்!!

மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசிய ஆசிரியர்!!

கர்நாடகா மாநிலம் கோலார் தாலுகா நரசாபுர என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் பிரகாஷ் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு வகுப்பறையில் முதல் இரவு என்றால் என்ன என்று மாணவ மாணவிகள் மத்தியில் கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது, தாம்பத்தியம் குறித்தும் விளக்கிப் பேசி இருக்கிறார்.

மாணவ - மாணவிகளுக்கு அது தொடர்பான ஆபாச படங்களையும் காட்டி பேசி இருக்கிறார். இதனையடுத்து மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.


மாணவிகளிடம் முதலிரவு குறித்து பேசிய ஆசிரியர்!!

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் பொதுமக்களும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியர் பிரகாஷைப் பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் ஆசிரியரின் செயல் குறித்து கல்வித்துறை அதிகாரியிடம் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் மாணவ மாணவியரிடம் அதிகாரி விசாரணை நடத்தி வகுப்பறையில் ஆசிரியர் பிரகாஷின் செயல் குறித்து தெரிய வந்ததை அடுத்து அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like