1. Home
  2. தமிழ்நாடு

துணிவு வெளியாகும் போது ரசிகர்களுக்கு செம ஆஃபர்!!

துணிவு வெளியாகும் போது ரசிகர்களுக்கு செம ஆஃபர்!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் தீவிர அஜித் ரசிகர். இவர் வீரம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். துணிவு திரைப்படம் வெற்றி பெற தனது உணவகத்தில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அஜித்தின் மெழுகு சிலையை திறந்துள்ளார்.

கம்பம் தேனி தேசிய நெடுஞ்சாலையில் சின்னமனூர் அருகே அமைந்துள்ள வீரம் உணவகத்தின் இரண்டாவது கிளையில் நடிகர் அஜித்தின் உருவ சிலையை திறந்து அஜித் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார் இவர்.

தீவிர அஜித் ரசிகரான காளிதாஸ் ஏற்கனவே அஜித் நடித்த வலிமை படம் வெளியானபோதும் தனது உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் ஆஃபர்கள் கொடுத்து அசத்தி இருந்தார்.


துணிவு வெளியாகும் போது ரசிகர்களுக்கு செம ஆஃபர்!!


அதேபோல் துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோது வீரம் உணவகத்தில் 61 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குலுக்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனம், எல்.இ.டி. டிவி, மிதிவண்டி , வாஷிங் மெஷின், வெட் கிரைண்டர், மிக்ஸி, குக்கர், சோபா செட், உள்ளிட்ட 61 பொருட்கள் வழங்கப்பட்டது.


துணிவு வெளியாகும் போது ரசிகர்களுக்கு செம ஆஃபர்!!


அதுமட்டுமல்லாமல் அஜித் நடித்த 61 திரைப்படத்தின் பெயர்களையும் எழுதியும் அவரின் புகைப்படத்தை ஒட்டி ஆல்பம் ஆக தயாரித்து வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி 60 ரூபாய்க்கும் வழங்கினார்.

துணிவு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி பழைய பத்து ரூபாய் நோட்டு போன்று இருப்பதால் பழைய பத்து ரூபாய் கொடுத்து சிக்கன் பிரியாணி பெற்று கொள்ளலாம் என்ற ஆஃபரும் இங்கே உள்ளது .

newstm.in

Trending News

Latest News

You May Like