1. Home
  2. தமிழ்நாடு

மெரினாவில் குளம்போல் தேங்கிய நீர் – துர்நாற்றத்தால் மக்கள் அவதி!!

மெரினாவில் குளம்போல் தேங்கிய நீர் – துர்நாற்றத்தால் மக்கள் அவதி!!

மாண்டஸ் புயலை தொடர்ந்து மிக மோசமாக மாறியுள்ளது சென்னை மெரினா கடற்கரை. மணல் பரப்பில் தண்ணீர் தனித்தனி தீவுகள் போல் காணப்படுகிறது. அந்த தண்ணீரில் பாசி பிடித்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்றும் அபாயம் உருவாகி உள்ளது. கனமழையின் பாதிப்பால் சிறிய பெட்டிகடைகள், மற்றும் ராட்டினங்கள் துருப்பிடித்து பழுதடைந்து ஆங்காங்கே கிடக்கின்றன.


மெரினாவில் குளம்போல் தேங்கிய நீர் – துர்நாற்றத்தால் மக்கள் அவதி!!

மழையால் கடைகள் மேலும் சிதைந்து வருகின்றன. கடைகள் மற்றும் ராட்டினங்கள் மீண்டும் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன. கடற்கரையில் துர்நாற்றம் வீசும் மெரினா மணல் பரப்பு பகுதியை மீண்டும் சுத்தமாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like