1. Home
  2. தமிழ்நாடு

தரிசன நேரம் – சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய முடிவு!!

தரிசன நேரம் – சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய முடிவு!!

சபரிமலை செல்லும் பாதையில் மரக்கூட்டம் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு போலீசார் மற்றும் பக்தர்கள் காயமடைந்த நிலையில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு அரசிடம் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளது.

மேலும், பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்க தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேவசம் போர்டுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி சபரிமலை தந்திரியிடம் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து தேவசம்போர்டு தரிசன நேரத்தை அரை மணி நேரம் நீட்டித்தது.


தரிசன நேரம் – சபரிமலை ஐயப்பன் கோவிலில் முக்கிய முடிவு!!

தினமும் பக்தர்கள் வருகை ஒரு லட்சத்தை தாண்டியது. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் அதிகரித்து வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கேட்டுகொண்டது.

இந்நிலையில், தற்போது 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் வரை தினசரி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம். இதை தினசரி முன்பதிவு 85,000 ஆக குறைக்க காவல்துறை முடிவெடுப்பதாக தெரிகிறது.

எனவே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக போலீஸ் - தேவசம்போர்டு உயர்நிலைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like