1. Home
  2. தமிழ்நாடு

இனி பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை..!!

இனி பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை..!!

கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதால் பக்தர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது. மேலும் சிலர் கோவில் கருவறையை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வந்தது. இதனால் தமிழகத்தில் கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரசித்திபெற்ற ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலிலும் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம்( ஜனவரி) 1-ந் தேதி முதல் செல்போனுக்கு தடை விதிக்கப்படுவதாக ஜெகநாதர் கோவிலின் தலைமை நிர்வாகி வீர் விக்ரம் யாதவ் தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like