1. Home
  2. தமிழ்நாடு

நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!!

நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!!

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. புதுச்சேரி – ஸ்ரீஹரிகோட்டா இடையே, மாமல்லபுரம் பகுதியில் புயல் கரையை கடக்க உள்ளது.

இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நாளை பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, செங்கல்பட்டு உட்பட 8 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு!!

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் இந்த தேர்வுகள் மற்றொரு நாளில் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதேபோல் நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like