1. Home
  2. தமிழ்நாடு

மாமல்லபுரத்தை நோக்கி நகரும் புயல் - தயார் நிலையில் மீட்பு படை..

மாமல்லபுரத்தை நோக்கி நகரும் புயல் - தயார் நிலையில் மீட்பு படை..

'மாண்டஸ்' புயல் தாக்கும் அச்சம் உள்ள மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

மாண்டஸ் புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.


மாமல்லபுரத்தை நோக்கி நகரும் புயல் - தயார் நிலையில் மீட்பு படை..


மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'மாண்டஸ்' புயல், இன்று இரவு முதல் நாளை வரை கரையை கடக்கவுள்ள நிலையில், மாமல்லபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். மிதவை படகு, மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், கயிறு, மர அறுவை இயந்திரங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


மாமல்லபுரத்தை நோக்கி நகரும் புயல் - தயார் நிலையில் மீட்பு படை..



பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் மரத்திற்கு கீழே நிற்க வேண்டாம்என்றும், சேதம் அடைந்த கட்டடத்திற்கு அருகே இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like