1. Home
  2. தமிழ்நாடு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தெற்கு ரயில்வே சொன்ன குட் நியூஸ்..!

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, எர்ணாகுளம் - தாம்பரம் வாராந்திர விரைவு ரயில் ஆரியங்காவு ஹால்ட் என்ற இடத்தில் கூடுதலாக நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

எர்ணாகுளம் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (06068 - 06067) இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் திங்கட்கிழமை மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, நியூ ஆரியங்காவுக்கு மாலை 6.45 மணிக்கும், ஆரியங்காவு ஹால்ட்டுக்கு மாலை 6.51 மணிக்கும் சென்றடையும். அங்கிருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும்.


மறு மார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, ஆரியங்காவு ஹால்ட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணிக்கும், நியூ ஆரியங்காவு நிலையத்தை அதிகாலை 5.07 மணிக்கும் அடையும். அன்றைய நாள் நண்பகல் 12.30 மணிக்குஎர்ணாகுளத்தை அடையும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக, இந்த கூடுதல் நிறுத்தம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like