1. Home
  2. தமிழ்நாடு

இமாச்சலில் ஆட்சி அமைக்கப் போவது யார்?.. பா.ஜ.-காங். கடும் மோதல்

இமாச்சலில் ஆட்சி அமைக்கப் போவது யார்?.. பா.ஜ.-காங். கடும் மோதல்

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

கடந்த மாதம் 12 ஆம் தேதி 68 இடங்களைக்கொண்ட இமாசல பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக மாநிலத்தின் 59 இடங்களில் 68 வாக்கு எண்ணிக்கை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.


தேர்தல் முடிந்து சுமார் 1 மாதமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும் வாக்குகள் அனைத்தும் இந்த மையங்களில் எண்ணப்படுகின்றன. இமாசல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டனர். அதேநேரம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றினர்.


இமாச்சலில் ஆட்சி அமைக்கப் போவது யார்?.. பா.ஜ.-காங். கடும் மோதல்


மாநிலத்தில் ஆட்சியமைக்க 35 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க முடியும் என பாரதிய ஜனதா கட்சி நம்பிக்கை தெரிவித்து உள்ளது. அதேநேரம் இழந்த ஆட்சியை கைப்பற்றுவோம் என காங்கிரசும் நம்பிக்கையுடன் இருக்கிறது.

இமாச்சல் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களில் மாநில காவல்துறையுடன், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like