1. Home
  2. தமிழ்நாடு

அப்போ என்ன புடிச்சது... இப்போ புடிக்கலையா... காதலிக்க மறுத்த காதலியை ஆபரேசன் பிளேடால் கொடூரமாக கொலை செய்த காதலன்!!

அப்போ என்ன புடிச்சது... இப்போ புடிக்கலையா... காதலிக்க மறுத்த காதலியை ஆபரேசன் பிளேடால் கொடூரமாக கொலை செய்த காதலன்!!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தபஸ்வி (21). இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்தார். இவரது பெற்றோர் வேலை நிமித்தமாக மும்பையில் தங்கியுள்ளனர். இதனால் தபஸ்வி விஜயவாடாவில் தனது அத்தையுடன் தங்கி பல் மருத்துவம் படித்து வந்துள்ளார்.

சமூக வலைதளம் மூலம் தபஸ்விக்கு கிருஷ்ணா மாவட்டம், மணிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் ஞானேஷ்வர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறிய உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் தன்னை காதலிக்கும்படி தபஸ்வியை தொடர்ந்து ஞானேஷ்வர் கட்டாயப்படுத்தி வந்துள்ளார். இதனால் தபஸ்விக்கும், ஞானேஷ்வருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. தொந்தரவை தாங்கிக் கொள்ள முடியாத தபஸ்வி, காதலன் ஞானேஷ்வர் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஞானேஷ்வரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

அப்போ என்ன புடிச்சது... இப்போ புடிக்கலையா... காதலிக்க மறுத்த காதலியை ஆபரேசன் பிளேடால் கொடூரமாக கொலை செய்த காதலன்!!

காதலனுடன் ஏற்பட்ட தகராறு குறித்து குண்டூர் மாவட்டம் தக்கெல்லபாடு கிராமத்தில் உள்ள தனது தோழியிடம் தபஸ்வி கூறியுள்ளார். இதனால் தபஸ்வியையும், ஞானேஷ்வரையும் சேர்த்து வைக்க அவரது தோழி முயற்சி செய்து இருவரையும் தனது வீட்டிற்கு வரவழைத்தார். தபஸ்வியும், ஞானேஷ்வரும் பேசிக் கொண்டு இருந்தபோது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

உன்னை காதலிக்க மாட்டேன், வேறொருவரை தான் திருமணம் செய்வேன் என தபஸ்வி கூறினார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஞானேஷ்வர், ஏற்கனவே திட்டமிட்டபடி கொண்டு வந்த அறுவை சிகிச்சை செய்யும் பிளேடால் தபஸ்வியின் கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக அறுத்துள்ளார்.


அப்போ என்ன புடிச்சது... இப்போ புடிக்கலையா... காதலிக்க மறுத்த காதலியை ஆபரேசன் பிளேடால் கொடூரமாக கொலை செய்த காதலன்!!

தோழி தடுக்க முயன்றும் அவரால் முடியவில்லை. மேலும் தானும் பிளேடால் கைகளில் அறுத்துக் கொண்டார் ஞானேஷ்வர். வீட்டிற்குள் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தபஸ்வியை மீட்டு குண்டூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தபஸ்வி பரிதாபமாக உயிரிழந்தார். கையை அறுத்துக்கொண்ட ஞானேஸ்வரை பொதுமக்கள் அடித்து உதைத்து கயிற்றால் கட்டி வைத்துவிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தக்கெல்லபாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ஞானேஷ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பல் மருத்துவ மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like