1. Home
  2. தமிழ்நாடு

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் எகிப்து அதிபர்..!!

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் எகிப்து அதிபர்..!!

2023 ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க எகிப்து அதிபர் அல் சிசி ஒப்புக்கொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்திய குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. எகிப்து அரபுக் குடியரசின் அதிபர் 2023ம் ஆண்டின் இந்திய குடியரசு தினத்தில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்வது இதுவே முதல் முறை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் நரேந்திர மோடி அப்தெல் பத்தா அல்-சிசிக்கு அனுப்பிய முறையான அழைப்பிதழை, கடந்த அக்டோபர் 16ம் தேதி அன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எகிப்திய அதிபரிடம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Trending News

Latest News

You May Like