1. Home
  2. தமிழ்நாடு

தன்னையே பணயமாக வைத்து லூடோ விளையாடிய பெண்!!

தன்னையே பணயமாக வைத்து லூடோ விளையாடிய பெண்!!

லூடோ விளையாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னையே பணயமாக வைத்து விளையாடியுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜினோர் மாவட்டம் நாகர் கோட்வாலி அருகே உள்ள தேவ்கலி கிராமத்தில் ரேணு என்ற பெண், கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கணவர் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். அங்கு வேலை செய்த பணத்தை வீட்டு செலவுக்காக மனைவிக்கு அனுப்பி வந்துள்ளார். ஆனால் வீட்டில் தனியாக இருந்த மனைவி அந்த பணத்தை வைத்து தனது வீட்டின் உரிமையாளருடன் 'லுடோ' விளையாடி வந்துள்ளார்.

இப்படியே தனது கணவர் அனுப்பிய பணம் முழுவதையும், சூதாட்டத்தில் தொலைத்த அந்த பெண், இறுதியாக தன்னையே பணயமாக வைத்து விளையாடி வந்துள்ளார்.


தன்னையே பணயமாக வைத்து லூடோ விளையாடிய பெண்!!

அப்போது அந்த பெண் தோற்றதால், வீட்டின் உரிமையாளருடன் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார். இதையடுத்து இந்த நிகழ்வு குறித்து தனது கணவரிடம் அவர் கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த கணவர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மனைவி லுடோவில் தோற்றதால், எதிராக விளையாடியவருடன் சென்றுவிட்டார். தயவு செய்து அவரை மீட்டு தாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like