1. Home
  2. தமிழ்நாடு

'சிட்டி ஆப் ஜாய்' நாவலை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்..!!

'சிட்டி ஆப் ஜாய்' நாவலை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்..!!

1931-ல் பிறந்த டொமினிக் லேபியர் அமெரிக்க எழுத்தாளர் லாரி காலின்ஸுடன் இணைந்து ஆறு புத்தகங்களை எழுதினார். லேபியர்-காலின்ஸுடன் இணைந்து இயற்றிய 6 புத்தகங்கள் 50 மில்லியன் பிரதிகள தாண்டி விற்பனையாகி உள்ளன. அவர்கள் இருவரும் இணைந்து இயற்றிய 'இஸ் பாரிஸ் பர்னிங்?' புத்தகம் உலகளவில் புகழ் பெற்றது.

1985-ல் வெளியான 'சிட்டி ஆப் ஜாய்' என்ற நாவலை எழுத்தாளர் டொமினிக் லேபியர் எழுதி வெளியிட்டார். இதில், கொல்கத்தாவில் ஒரு ரிக்சாக்காரர் வாழ்க்கையில் படும் கஷ்டங்களைப் பற்றி எழுதினார். இந்த நாவல் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த நாவலை தழுவி ஒரு திரைப்படம் 1992-ல் வெளியானது. இதில் பேட்ரிக் ஸ்வேஸ் நடித்தார் மற்றும் ரோலண்ட் ஜோஃப் இயக்கினார்.


'சிட்டி ஆப் ஜாய்' நாவலை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் காலமானார்..!!

'சிட்டி ஆப் ஜாய்' நாவல் மூலம் தனக்கு கிடைத்த ராயல்டிகளில் பெரும்பகுதியை அவர் இந்தியாவில் பல்வேறு மனிதாபிமான திட்டங்களுக்காக நன்கொடையாக வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008-ம் ஆண்டு குடியரசு தினத்தில், இந்தியாவின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருது லாபியருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் எழுத்தாளர் டொமினிக் லேபியர், வயோதிகத்தின் காரணமாக காலமானார். இந்த தகவலை அவரது மனைவி தெரிவித்தார். இவரது மறைவு, உலக எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படைப்பாளிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like