1. Home
  2. தமிழ்நாடு

இமாச்சல பிரதேசத்தில் இழுபறி – கருத்துக்கணிப்பு முடிவு!!

இமாச்சல பிரதேசத்தில் இழுபறி – கருத்துக்கணிப்பு முடிவு!!

இமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவுகளில் இழுபறி இருக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் முடிவில் தெரியவந்துள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 75.6 சதவீத வாக்குகள் பதிவானது.

மொத்தம் 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில், ஆட்சியமைக்க 35 இடங்ளில் வெற்றி பெற வேண்டும்.

இந்த நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.


இமாச்சல பிரதேசத்தில் இழுபறி – கருத்துக்கணிப்பு முடிவு!!


எனினும், காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கருத்துக் கணிப்புகள் கூறுவதால், இரு கட்சிகளுக்கும் இடையே இழுபறி நிலவும் எனவும் கருதப்படுகிறது.

தேர்தலுக்கு பின்னர் பி-மார்க் நடத்திய கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதா கட்சிக்கு 34 முதல் 39 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 28 முதல் 33 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு ஒரு தொகுதியும் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.


இமாச்சல பிரதேசத்தில் இழுபறி – கருத்துக்கணிப்பு முடிவு!!


இந்தியா டுடே கருத்துக் கணிப்பின்படி 24 முதல் 34 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 40 இடங்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பின்படி பாரதிய ஜனதாவிற்கு 34 முதல் 39 இடங்களையும், காங்கிரஸ் 28 முதல் 33 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like