1. Home
  2. தமிழ்நாடு

கோவிலுக்குள் குத்தாட்டம்… பெண்கள் மீது நடவடிக்கை!!

கோவிலுக்குள் குத்தாட்டம்… பெண்கள் மீது நடவடிக்கை!!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில் வளாகத்தில் பாதுகாப்பு படையில் உள்ள பெண்கள் இருவர் பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பாலிவுட் ஹிட் பாடல்களுக்கு கருப்பு உடை அணிந்த இரண்டு பெண்கள் நடனமாடியுள்ளனர். அவர்கள் இவ்வாறு நடனம் ஆடியது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.


கோவிலுக்குள் குத்தாட்டம்… பெண்கள் மீது நடவடிக்கை!!


இதுபோன்ற நிகழ்வுகளை தடை செய்யவே, சில கோவில்களில் போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரானது.

இதனையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like