1. Home
  2. தமிழ்நாடு

வைரவன் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் பிரபல நடிகர்!!

வைரவன் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் பிரபல நடிகர்!!

உடல்நலக்குறைவால் மரணமடைந்த நடிகர் வைரவனின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான வெண்ணிலா கபடிகுழு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன் உட்பட பலர் நடித்து இருந்தனர்.


வைரவன் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் பிரபல நடிகர்!!


மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ஹரி வைரவன் உயிரிழந்தார். அவரது மறைவு திரைப்படத்துறையில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


வைரவன் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்கும் பிரபல நடிகர்!!


பலரும் ஹரி வைரவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மன்னிக்கவும் வைரவன், உன் ஆன்மா சாந்தி அடையட்டும். வெண்ணிலா கபடிகுழு படத்திலிருந்து உன் நினைவுகள் எப்போதும் இருக்கும் என விஷ்ணு விஷால் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், வைரவனின் குழந்தைகளின் படிப்புச் செலவை தாம் ஏற்பதாக விஷ்ணு விஷால் கூறியுள்ளார். இதற்கான வாக்குறுதியை அவரது மனைவியிடம் அளித்துள்ளதாக, கட்டா குஸ்தி திரைப்பட வெற்றி விழாவில் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like