1. Home
  2. தமிழ்நாடு

'பாபா' திரைப்படத்தின் புதிய டிரைலர் பார்த்திருக்கீங்களா..!!

'பாபா' திரைப்படத்தின் புதிய டிரைலர் பார்த்திருக்கீங்களா..!!

கடந்த 2002-ல், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடித்த படம் பாபா. இந்த படத்தில் நாயகியாக மனிஷா கொய்ரலா நடித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா டைரக்டு செய்து இருந்தார். இந்த படத்தில் ரஜினி காட்டும் பாபா முத்திரை அவரின் தனி அடையாளமாகவே மாறியது.

தற்போது பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பித்து மீண்டும் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிரேடிங் செய்துள்ளனர். அதோடு பாபா படத்துக்கு ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார். ஆரம்பத்தில் அவரது உரையோடு படம் தொடங்க உள்ளது. அத்துடன் படத்தில் உள்ள சில குறிப்பிட்ட காட்சிகளுக்கு புதிதாக குரல் பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டுள்ள 'பாபா' படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "என்றென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு திரைப்படம். பாபா ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிப்பு விரைவில் வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


Trending News

Latest News

You May Like