1. Home
  2. தமிழ்நாடு

கல்லூரி விடுதியில் பொறியியல் மாணவர் தற்கொலை!!

கல்லூரி விடுதியில் பொறியியல் மாணவர் தற்கொலை!!

சேலத்தில் கல்லூரி விடுதியில் பொறியியல் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் மலேசியாவில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீமேஸ் ரூபன் (19) சேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கல்லூரி விடுதியில் பொறியியல் மாணவர் தற்கொலை!!

இது குறித்து அறிந்த சூரமங்கலம் போலீஸார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வியால் மாணவர் சீமேஸ் ரூபன் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like