1. Home
  2. தமிழ்நாடு

பிரபல காமெடி நடிகர் மரணம்.. முதல்வர், திரையுலகினர் இரங்கல்..!

பிரபல காமெடி நடிகர் மரணம்.. முதல்வர், திரையுலகினர் இரங்கல்..!

உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள காமெடி நடிகர் கொச்சு பிரேமன், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 68.

கேரளாவில், நாடக கலைஞராக இருந்து பின்னர் திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் கே.எஸ்.பிரேம் குமார் என்ற கொச்சு பிரேமன். இவர், நகைச்சுவை நடிகராக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பல மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.


இவரது முதல் படம் 'தில்லிவாலா ராஜகுமாரன்'. 1996-ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் நடிகர் ஜெயராம், நடிகை மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கொச்சு பிரேமன், ஏறக்குறைய 250 படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்த கொச்சு பிரேமன், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து அவர் இன்று காலமானார்.

கொச்சு பிரேமன் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன், நடிகர்கள் பிருத்விராஜ், அஜூ வர்கீஸ், மனோஜ் கே.ஜெயன், நாதீர்ஷா உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like