1. Home
  2. தமிழ்நாடு

கடன் பிரச்னை… இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண் கைது!!

கடன் பிரச்னை… இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண் கைது!!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வரும் பாயல் பாஹ்தி (22) என்ற பெண்ணின் பெற்றோர் உறவினராக சுனில் என்பவரிடம் இருந்து 5 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருந்தனர்.

கடனை திருப்பி தரும்படி சுனில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். அதேபோன்று, பாயலின் அண்ணி மற்றும் அவரது சகோதரர்கள் பணத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, கடன் தொல்லை காரணமாக பாயலின் பெற்றோர் மே மாதம் தற்கொலை செய்துகொண்டனர். தனது பெற்றோரின் தற்கொலைக்கு காரணமான உறவினர்களை பழிவாங்க பாயல் திட்டமிட்டார்.


கடன் பிரச்னை… இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண் கைது!!


தனது காதலனான அஜய் தாக்கூர் உடன் சேர்ந்து அவர் நொய்டாவில் உள்ள ஒரு மாலுக்கு சென்றார். அங்கு தன்னை போன்ற உடல் அமைப்பு கொண்டு வணிக வளாகத்தில் வேலை செய்து வரும் ஹேமா சவுதிரி (28) என்ற பெண்ணை பார்த்துள்ளார்.

எனவே, ஹேமாவை கொன்று தான் உயிரிழந்துவிட்டதாக அனைவரையும் நம்பவைக்க பாயல் திட்டமிட்டார். காதலன் அஜய் தாக்கூரை மாலில் வேலை செய்யும் ஹேமாவிடம் பழகுமாறு கூறி உள்ளார். அஜய் தாக்கூரும் அவருடன் நட்பாக பழகினார்.

நவம்பர் 12ஆம் தேதி ஹேமாவை பைக்கில் ஏற்றிக் கொண்டு அஜய் தனது காதலி பாயலின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த பாயல் மற்றும் அவரது காதலன் அஜய், ஹேமாவை கழுத்தறுத்து கொலை செய்தனர்.


கடன் பிரச்னை… இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண் கைது!!


பின்னர் ஹேமாவின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினர். கொதிக்கும் எண்ணெய் முகத்தில் பட்டதால், அழகு போய்விட்டதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்வதாக பாயல் கைப்பட கடிதம் எழுதி ஹேமா அருகே வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார்.

ஆனால் ஹேமாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கடைசியாக அஜய் தக்கூருடன் பைக்கில் சென்றது தெரியவந்தது. விசாரணையில் பாயல் மற்றும் காதலன் அஜய் ஆகிய இருவரும் ஹேமாவை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து, 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like