1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவில் இருந்து கோவை செல்வராஜ் விலகல்!!

அதிமுகவில் இருந்து கோவை செல்வராஜ் விலகல்!!

அதிமுகவில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஈபிஎஸ் அணி – ஓபிஎஸ் அணி என்று இரண்டாக பிரிந்த பிறகு, ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக இருந்தவர் கோவை செல்வராஜ். இவர் ஓபிஎஸ் அணியில் இருந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

ஓபிஎஸ் தரப்பின் செய்தித் தொடர்பாளர் போல் இருந்து வந்தார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவே உண்மையான அதிமுக. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, பட்டா இல்லாத புறம்போக்கு நிலம்போல உள்ளது என்று விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சிக்கிறார். துரோகத்தின் முழு உருவமே எடப்பாடி பழனிசாமி தான் என்று கூறியவர் இவர். ஜெயலலிதா மறைவுக்கு அப்போதைய அமைச்சர்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்டியவர்.


அதிமுகவில் இருந்து கோவை செல்வராஜ் விலகல்!!

இப்படி ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சிக்கும் நபராக இருந்து வந்த கோவை செல்வராஜ் அதிமுகவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சுயநலத்துக்காக சண்டை போட்டு வருகின்றனர் என்றும், அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள கோவை செல்வராஜ், கட்சியில் இருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like