1. Home
  2. தமிழ்நாடு

உணவில் சயனைடு கலந்து கணவன், மாமியாரை கொன்ற பெண்!!

உணவில் சயனைடு கலந்து கணவன், மாமியாரை கொன்ற பெண்!!

சொத்துக்காக கணவன் மற்றும் மாமியாருக்கு உணவில் சயனைடு கலந்து கொலை செய்த பெண் காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை சாண்டாக்ரூசை சேர்ந்த தொழிலதிபர் கமல்காந்த் - காஜல் தம்பதிக்கு திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. சண்டை காரணமாக கணவனைவிட்டு பிரிந்து வாழ்ந்த காஜல், கடந்த ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினார்.

அதன்பின்னர் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் கமல்காந்தின் தாயார் சரளாதேவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.

பின்னப் உடலில் பல உறுப்புகள் செயலிழந்ததால் உயிரிழந்தார். ஆகஸ்ட் மாதம் கமல்காந்துக்கும் வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சையின் போது, அவரது ரத்தத்தில் ஹெவி மெட்டல் இருப்பது தெரிய வந்தது.


உணவில் சயனைடு கலந்து கணவன், மாமியாரை கொன்ற பெண்!!

17 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பல உறுப்புகள் செயலிழந்து செப்டம்பர் 20ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இந்த மரணம் குறித்து குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.

அதே நேரத்தில் அவரது மனைவி காஜல், ஜவுளி நிறுவனத்தில் இருந்து இயந்திரங்களை விற்பனை செய்வதிலும், இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதிலும் பிசியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கமல்காந்த் சகோதரி சாண்டாகுரூஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், மரணத்திற்கு காரணம் காஜல் மற்றும் அவரது காதலர் ஹிதேஷ் ஜெயின் என்பது தெரியவந்தது. காஜல், இறந்தவர்களின் உணவில் மெல்லக்கொல்லும் சயனைடுகளை கலந்து உள்ளார் .

குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like