1. Home
  2. தமிழ்நாடு

பால் தட்டுப்பாடு... விலை அதிகரிக்க திட்டம்!

பால் தட்டுப்பாடு... விலை அதிகரிக்க திட்டம்!

புதுச்சேரியில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதன் விற்பனை விலையை அதிகரிக்க முதலமைச்சருடன் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பாண்லே பாலுக்கு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகவர்களுக்கு தரும் பால் 25 சதவீதம் குறைத்து வழங்கப்படுவதாக புகார் வந்துள்ளது. ஒரு நாள் பால்தேவை ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டராக உள்ள நிலையில், 65 ஆயிரம் லிட்டர் பால் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கிடைக்கின்றது. 20 ஆயிரம் லிட்டர் பால் கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து பெறப்படுகின்றது. மீதமுள்ளதை தனியார் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து பாண்லே மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.


பால் தட்டுப்பாடு... விலை அதிகரிக்க திட்டம்!


இந்நிலையில் கடந்த 10 நாட்களாக புதுச்சேரியில் பாண்லே பால் விநியோகத்தின் அளவு 25 சதவீதம் குறைந்துள்ளது. இது குறித்து விசாரித்தபோது பால் கொள்முதல் செய்ய உரிய பணமில்லை என்று கூறப்படுகின்றது. உள்ளூரில் லிட்டருக்கு ரூ.33 க்கு பால் கொள்முதல் செய்து ரூ.42க்கு விற்பனையாகின்றது. ஆனால் கர்நாடகாவில் இருந்து லிட்டர் ரூ.46 க்கு கொள்முதல் செய்து ரூ.7க்கு செலவிட்டு பதப்படுத்தி விட்டு ரூ.42க்கே விற்பனையாகின்றது .இதனால் பான்லே நிறுவனத்திற்கு தினமும் ரூ.3.5 லட்சத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாண்லே நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. உள்ளூர் பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் பால் கொள்முதல் விலையை அதிகரித்து வழங்கவும், பால் விற்பனை விலையை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


பால் தட்டுப்பாடு... விலை அதிகரிக்க திட்டம்!


தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் புதுச்சேரியிலும் பால் கொள்முதல் விலை ரூ.3க்கும், விற்பனை விலையை ரூ.6 அளவிற்கும் உயர்த்தலாம் என அதிகாரிகளின் கருத்தை முன்வைத்துள்ளனர். எனவே மக்களை பாதிக்காதவாறு பால் விற்பனை விலையை உயர்த்த வேண்டும் என்றும் அதற்கான கோப்பை தயாரித்து வழங்க முதலமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே புதுச்சேரியில் பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை விரைவில் உயரும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

newstm.in

Trending News

Latest News

You May Like