1. Home
  2. தமிழ்நாடு

பாஜக தேசிய நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...என்ன ஆச்சு?..

பாஜக தேசிய நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...என்ன ஆச்சு?..

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெற்று, தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக செயல்திட்டங்களை வகுத்து வருகிறது.இதே போன்று அடுத்த ஆண்டு கர்நாடகா, திரிபுரா மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அவற்றிலும் வெற்றி பெற பாரதிய ஜனதா இலக்கு நிர்ணயித்துள்ளது.


பாஜக தேசிய நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...என்ன ஆச்சு?..

இந்தநிலையில், பாரதிய ஜனதாவின் தேசிய அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வரும் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமை தாங்குகிறார். தேசிய நிர்வாகிகள் மட்டுமின்றி, மாநிலங்களின் பாரதிய ஜனதா தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




பாஜக தேசிய நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...என்ன ஆச்சு?..

நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கு தயாராவது பற்றி இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. தற்போது நடந்து வரும் கட்சியின் அமைப்பு சார்ந்த பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சர்வதேச பொருளாதார மந்த நிலைக்கிடையே இந்தியா எட்டிய பொருளாதார வளர்ச்சி பற்றியும், அதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்வது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.



பாஜக தேசிய நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை...என்ன ஆச்சு?..

ஜி20 அமைப்பின் மாநாடு டெல்லியில் நடக்கும்போது, அதில் பங்கேற்க வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் கலாசார, பிராந்திய பன்முகத்தன்மையை விளக்கக்கூடிய நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளை பொதுமக்களிடம் எடுத்துச் சென்றால், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பாரதிய ஜனதாவுக்கு உதவியாக இருக்கும் என்ற கருதப்படுகிறது. அதுபற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like