பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. எலான் மஸ்க் விளக்கம்..!

பிரபல பாடகரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்.. எலான் மஸ்க் விளக்கம்..!
X

பிரபல ஹாலிவுட் ராப் இசைப் பாடகர் கன்யே வெஸ்ட் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பிரபல ராப் இசை பாடகர் கன்யே வெஸ்ட். பல முறை கிராமி விருதுகளை வென்ற இவருக்கு பல்லாயிரக்காணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.


இவர், ஹிட்லர் மற்றும் நாசிசவாதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும், எலான் மஸ்க் - கன்யே வெஸ்ட் இடையேயான தனிப்பட்ட உரையாடல்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். அவருடைய கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், ட்விட்டர் விதிமுறைகளை மீறியும் இருந்தது. எனவே, அவருடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Next Story
Share it