1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தப் பாடம் நீக்கம்.. கல்வித்துறை அறிவிப்பு..!

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தப் பாடம் நீக்கம்.. கல்வித்துறை அறிவிப்பு..!

6-ம் வகுப்பு கணித பாட புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ரம்மி குறித்த பாடப்பகுதி அடுத்த கல்வியாண்டு முதல் நீக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தப் பாடம் நீக்கம்.. கல்வித்துறை அறிவிப்பு..!

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு, மூன்றாவது பருவ கணித பாடப் புத்தகத்தில் 'ஆன்லைன் ரம்மி விளையாட்டை எப்படி விளையாடுவது' என்பது குறித்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது.

கல்வித் துறையே ரம்மி விளையாட்டை கற்றுத் தரும் வகையில், முகவுரை மற்றும் விளக்கவுரையுடன் இந்த பாடப்பகுதி தரப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அடுத்த கல்வியாண்டு முதல் இந்தப் பாடம் நீக்கம்.. கல்வித்துறை அறிவிப்பு..!

இந்நிலையில், மாணவர்களுக்கு எண்கள் குறித்து தெளிவாக விளக்கவே கணிதப் புத்தகத்தில் இந்த கல்வியாண்டில் தான் இந்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் ரம்மி விளையாட்டு குறித்த இந்தப் பாடப்பகுதி முழுவதுமாக நீக்கப்படும் என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like