1. Home
  2. தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் வழங்க வழிகாட்டல் வெளியீடு..!

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. சம்பளம் வழங்க வழிகாட்டல் வெளியீடு..!

மாவட்ட கல்வி அலுவலகம் புதிதாக பிரிக்கப்பட்டதால், ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான சம்பளம் வழங்க வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அதில், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என, மாவட்ட கல்வி அலுவலகம் பிரிக்கப்பட்டது.


இந்த அலுவலக பிரிப்பின் காரணமாக, பள்ளிகளின் எல்லைகளும் பிரிக்கப்பட்டன. அதேபோல், தொடக்கக் கல்விக்கு புதிதாக டிஇஓ, பிஇஓ அலுவலகங்களும் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த புதிய அலுவலகங்களின் எல்லைகளில் இணைந்துள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு நவம்பர் மாத சம்பளம் வழங்க, வழிகாட்டுதலை தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உரிய முறையில், நிதித்துறையின் இணையதள குறியீட்டு எண்களை உருவாக்கி, தாமதமின்றி மாத ஊதியத்தை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like