1. Home
  2. ஆரோக்கியம்

குரங்கம்மையின் பெயர் மாற்றம்!!

குரங்கம்மையின் பெயர் மாற்றம்!!

குரங்கம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம் பாக்ஸ் என மாற்றியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் 1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரசால் பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கம்மை என பெயர் வந்தது.


குரங்கம்மையின் பெயர் மாற்றம்!!


குரங்கம்மை என்ற பெயருக்கு பதிலாக நோய்க்கு வேறு பெயர் சூட்ட வேண்டும் என்று உலகில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் பல்வேறு விஞ்ஞானிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து குரங்கு அம்மை நோய் இனி 'எம் பாக்ஸ்' என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரங்கு அம்மை மற்றும் எம் பாக்ஸ் பெயர்கள் இரண்டும் பயன்படுத்தப்படும். அதன் பின் எம் பாக்ஸ் என்ற பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like