1. Home
  2. வர்த்தகம்

பெருமளவு குறையும் பெட்ரோல், டீசல் விலை!!

பெருமளவு குறையும் பெட்ரோல், டீசல் விலை!!

பெட்ரோல், டீசல் விலை விரைவில் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை என்றாலும் கூட எரிபொருள் விலை மக்களை தினமும் பதம் பார்க்கிறது. அந்த அளவுக்கு இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 என்றும் விற்பனையாகி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது.


பெருமளவு குறையும் பெட்ரோல், டீசல் விலை!!

இந்தியாவில் போதுமான அளவுக்கு விலையை ஏற்கனவே உயர்த்திவிட்டதால் கடந்த சில மாதங்களாக எரிபொருள் விலையை உயர்த்தவில்லை. அதே நேரத்தில் குஜராத் தேர்தலும் நடைபெறுகிறது. அதனால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில், விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 8 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 27% குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு டாலருக்கும் 45 பைசா குறைத்தாலும், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.14 முதல் ரூ.15 வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like