1. Home
  2. தமிழ்நாடு

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் விபத்தில் பலி..!

மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர் விபத்தில் பலி..!

மாரடைப்பு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 58 வயது முதியவர் பரிதாபமாக பலியானார்.


உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்லோல்பூர் கிராமத்தில் வசிப்பவர் பூப் சிங் (58). இவர் மற்றும் இவருடைய மகன் பிரதீப், மருமகள் மற்றும் 9 வயது பேத்தி ஆகியோர் ஒரு காரில் அங்கு உள்ள பச்சௌடா கோயிலுக்குச் சென்றனர்.

காரை பிரதீப் ஓட்டி வந்த நிலையில், அவரது தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, கிழக்கு புறவழி விரைவுச் சாலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் பிரதீப்பின் மனைவி மற்றும் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.


பிரதீப்பின் மனைவி அசோக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதே நேரத்தில் பூப் சிங் காஜியாபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like