1. Home
  2. விளையாட்டு

இந்த குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கும் காவல்துறை..!!

இந்த குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் - எச்சரிக்கும் காவல்துறை..!!

2022 கால்பந்துக் உலகக் கோப்பை போட்டி பயன்படுத்தி மோசடி செய்ய ஒரு கும்பல் இறங்கியுள்ளது குறித்து காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

* FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.*

* நான் என்னுடையதைப் பெற்றேன்.*

* இதைத் திறக்கவும்*

என ஒரு லின்குடன் குறுஞ்செய்திகள் பகிரப்படுகின்றன. இதனை நம்பி க்ளிக் செய்பவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் பறிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த குறுஞ்செய்திகளை நம்பாமல் இருக்குமாறு தமிழக காவல்துறை ட்விட்டரில் வலியுறுத்தியிருக்கின்றனர்.

"50 GB டேட்டாவை இலவசமாக வழங்குகிறோம் என்று வரும் குறுஞ்செய்தியை நம்பி ஏமாற வேண்டாம் எச்சரிக்கையாக இருக்கவும்.." என தமிழக காவல்துறை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளனர்.




Trending News

Latest News

You May Like