1. Home
  2. தமிழ்நாடு

உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டி..!!

உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டி..!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்திருக்கிறார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் தினமும் ஆஜராகி நிபந்தனையின்படி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்த நிலையில் தனது செல்போன் உரையாடலை ஒட்டு கேட்பதாக பகிரங்க குற்றச்சாட்டு முன் வைத்திருக்கிறார். இனி அரசியல் களத்திலும் குதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வரும் சவுக்கு சங்கர் வரும் சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் போட்டியிட்டாலும் சரி, சேப்பாக்கத்தில் போட்டியிட்டாலும் சரி அவருக்கு எதிராக போட்டியிடப் போவதாக முடிவு எடுத்திருக்கிறார்.

உதயநிதி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டி..!!

இந்த நிலையில் கைது செய்யப்பட்டதும் தனக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து பேசி உள்ளார் சவுக்கு சங்கர். இதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

அப்போது, உதயநிதிக்கு எதிராக சவுக்கு சங்கர் போட்டியிட்டால் அந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை நிறுத்தாமல் சவுக்கு சங்கருக்கு ஆதரவு அளிப்போம் . விவசாய சின்னத்திலும் அவரை களம் இறக்க தயார் . அப்படி இல்லை என்றால் அவர் சுயேட்சையாக போட்டியிட விரும்பினாலும் நான் இறங்கி வேலை செய்வேன் என்று கூறி இருக்கிறார் சீமான்.

Trending News

Latest News

You May Like