1. Home
  2. தமிழ்நாடு

நமக்கு நாமே.. வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!

நமக்கு நாமே.. வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப்பில் தற்போது வரை நாம் பிறருக்கு தான் மெசேஜ் அனுப்பி வந்திருப்போம். ஆனால் இப்போது, நமது எண்ணுக்கு நாமே மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபல சேட்டிங் தளமான வாட்ஸ்அப் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வழங்கி வருகிறது. அந்த வகையில் மெசேஜ் அனுப்புவது, ஸ்டேட்டஸ் பார்ப்பது, குழுவை உருவாக்குவது உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி வழங்கி உள்ளது.

நமக்கு நாமே.. வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!

அதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அப்டேட்களை பீட்டா வெர்ஷனில் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தவகையில் தற்போது, நமக்கு நாமே மெசேஜ் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பில் தற்போது வரை நாம் பிறருக்கு தான் மெசேஜ் அனுப்பி வந்திருப்போம். ஆனால் இப்போது, நமது எண்ணுக்கு நாமே மெசேஜ் அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நமது எண்ணை YourSelf என பதிவு செய்து கொண்டு, நமது எண்ணுக்கு நாமே மெசேஜ் அனுப்பலாம். இதன் மூலம் நமக்கு தேவையான பைல்கள், PDF டாகுமெண்ட்கள், முக்கிய தகவல்களை நமக்கு நாமே அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வசதி தற்போது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்துள்ள நிலையில், அடுத்த வாரம் முதல் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

Trending News

Latest News

You May Like