1. Home
  2. தமிழ்நாடு

பயணிகளுக்கு குட் நியூஸ்.. கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்..!

பயணிகளுக்கு குட் நியூஸ்.. கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்..!

சென்னையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.


அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதுபோல், விம்கோ நகர் - விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

மேலும், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like