1. Home
  2. ஆரோக்கியம்

வேகமாக பரவும் தட்டம்மை – தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!

வேகமாக பரவும் தட்டம்மை – தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!

மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தட்டம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதற்காக குடிசை பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று மும்பையில் புதிதாக 11 பேருக்கு தட்டம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தட்டமைக்கு மேலும் ஒரு குழந்தை உயிரிழந்ததாக தகவல் வெளியானது.


வேகமாக பரவும் தட்டம்மை – தடுப்பு நடவடிக்கை தீவிரம்!!

மும்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தட்டம்மை நோய் தொற்றை கட்டுப்படுத்த 9 மாதம் முதல் 5 வயது வரை உள்ள 1 லட்சத்து 34 ஆயிரத்து 833 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பா் முதல் மாா்ச் வரை தட்டம்மை பரவல் அதிகமாகக் காணப்படும். குழந்தைகளை அதிகம் பாதிக்கும் அந்நோய்க்கு ஆரம்பநிலையிலேயே சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு காய்ச்சல் முகாம்களை அதிக எண்ணிக்கையில் நடத்தி, தட்டம்மை பாதிப்பை முன்கூட்டியே அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like