1. Home
  2. தமிழ்நாடு

அறிவுரை கூறிய மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!!

அறிவுரை கூறிய மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!!

ராணிப்பேட்டை அருகே மாமனாரை, அடித்தே கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பவர் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் பிரியாணி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இஸ்மாயிலின் மூத்த மகள் ஷபியாபானுவிற்கு அதே பகுதியை சேர்ந்த ரஹ்மதுல்லா என்பவரோடு திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர்.

ரஹ்மதுல்லா ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். ஷபியாபானுவிற்கு ஒரு மகன் உள்ள நிலையில் 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவர் ரஹ்மதுல்லா ஓட்டுநர் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.


அறிவுரை கூறிய மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!!


மேலும் போதை பழக்கத்திற்கு அடிமையானதோடு ரஹ்மதுல்லாவின் நடவடிக்கைகளில் அதிகளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவ்வப்போது கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் ரஹ்மத்துல்லா, சின்ன சின்ன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமடைந்த ஷபியாபானு, இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

உடனடியாக மருமகனை, தனது வீட்டிற்கு வருமாறு இஸ்மாயில் அழைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இஸ்மாயில் தனது குடும்பத்தினர் முன்னிலையில் மருமகன் ரஹ்மத்துல்லாவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.


அறிவுரை கூறிய மாமனாரை அடித்துக் கொன்ற மருமகன்!!


குடிபோதையில் இருந்த ரஹ்மத்துல்லா ஆத்திரத்தில், நாற்காலியில் அமர்ந்திருந்த மாமனாரை திடீரென கண்மூடித்தனமாக தாக்க தொடங்கினார். நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆற்காடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, ரஹ்மதுல்லாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like