1. Home
  2. ஆரோக்கியம்

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவுக்கு பரவும் ஆபத்து உள்ளதா?

சீனாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவுக்கு பரவும் ஆபத்து உள்ளதா?

தீவிர கொரோனா பரவலால் சீன தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஷாங்காய், குவாங்சோ, செங்டு, ஜினான், லான்ஸோ, ஜிலின் ஆகிய பகுதிகளில் தொற்று அதிகரித்திருப்பதால், வணிக வளாகங்கள் ஸ்தம்பித்துள்ளன. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிராக பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் உச்சம் தொட தடுப்பூசி விகிதமே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.


சீனாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவுக்கு பரவும் ஆபத்து உள்ளதா?


93 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், பழைய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட சீன தடுப்பூசிகள் வீரியம் குறைந்தவை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 80 வயதுக்கு மேற்பட்டோரில் 20% குறைவானவர்களே பூஸ்டர் டோஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகள் மிரண்டு போயிருக்கின்றன. கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார சரிவில் இருந்து இந்தியா இப்போதுதான் மெல்ல மெல்ல எழுந்து வருகிறது.


சீனாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவுக்கு பரவும் ஆபத்து உள்ளதா?


சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படும் ஒமைக்ரான் BF.7 வைரஸ், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதுதான். கொரோனா பெருந்தொற்றால், இந்தியா பல்வேறு சிரமங்களை சந்தித்துவிட்டது.

தற்போதும் கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் ஆயிரத்தை கடந்து தொற்று பதிவாகி வருகிறது. இதனால், சீனாவில் உச்சம் அடைந்திருக்கும் கொரோனா பாதிப்பு இந்தியாவை மீண்டும் கவலை கொள்ள செய்திருக்கிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like