1. Home
  2. தமிழ்நாடு

இந்த வாகனங்கள் சபரிமலைக்கு வர தடை!!

இந்த வாகனங்கள் சபரிமலைக்கு வர தடை!!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு வரும், பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

இதுவரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை மூன்று மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

அதிகாலை 4 மணிமுதல் காலை 9 மணி வரை மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே பக்தர்களின் பாதுகாப்பு கருதி கேரள அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.


இந்த வாகனங்கள் சபரிமலைக்கு வர தடை!!

கேரள மோட்டார் வாகனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள், பொது போக்குவரத்து மற்றும் வாடகை அல்லது சொந்த வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ளக்கூடாது என்றும், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் பம்பைக்கு செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தூக்கமின்மை மற்றும் சோர்வுடன் பக்தர்கள் பயணம் செய்வதால், முன்னெச்சரிக்கையாக இருசக்கர வாகனங்களில் பம்பைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like