1. Home
  2. தமிழ்நாடு

பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சு – மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சு – மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

பெண்கள் ஆடை அணியாவிட்டாலும் அழகாக இருப்பார்கள் என்று, யோகா குரு பாபா ராம்தேவ் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் ஹைலேண்ட் பகுதியில், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் மும்பை மகிளா பதஞ்சலி யோகா சமிதி சார்பில் யோகா அறிவியல் முகாம் மற்றும் மகளிர் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்பியுமான ஸ்ரீகாந்த் ஷிண்டே உள்ளிட்ட ஏராமானோர் கலந்துகொண்டனர்.


பாபா ராம்தேவின் சர்ச்சை பேச்சு – மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

இதில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், "பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள், எதுவும் அணியாவிட்டாலும் என் பார்வையில் அவர்கள் அழகாக இருக்கிறார்கள்" என்று கூறினார்.

அவரது கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கத்தை மூன்று நாட்களுக்குள் ஆணைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க உத்தரவி பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like