1. Home
  2. தமிழ்நாடு

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்குவிட் கேம் நடிகர்!!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்குவிட் கேம் நடிகர்!!

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓ யோங் சு, நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான 'ஸ்குவிட் கேம்' இணைய தொடர் மூலம் உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டார்.

78 வயதான ஓ யோங் சு, ஸ்குவிட் கேம் தொடருக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருதை வென்றார். இந்த விருதை பெற்ற முதல் தென் கொரிய நடிகரும் இவர்தான்.

இந்நிலையில் இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு, யோங் சு தன்னை தகாத முறையில் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.


பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஸ்குவிட் கேம் நடிகர்!!

அதன் அடிப்படையில் யோங் சு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பெண், கடந்தாண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்தார். ஆனால், அந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் முடித்துவைக்கப்பட்டது.

தற்போது, பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோளை ஏற்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது, தன் மீதான குற்றச்சாட்டை யோங்-சு மறுத்தார்.

அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் நடித்த விளம்பரங்களின் ஒளிபரப்பை நிறுத்த தென்கொரிய கலாசார அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. 50 வருடங்களாக நடிப்புத் துறையில் இருந்து வரும் ஓ யோங் சு, ஸ்குவிட் கேம் மூலம்தான் உலகம் முழுவதும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like