1. Home
  2. விளையாட்டு

அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்: வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்..!


கத்தாரில், 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத்தொடரில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா - சவுதி அரேபியா அணிகள் மோதின. இதன் முடிவில், 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றது.


இதையடுத்து, சவுதி அரேபியா அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவூத் சவூத் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதி அரேபிய அணியின் வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என சவுதி மன்னர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அனைவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்: வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சவுதி மன்னர்..!

அனியின் வீரர்கள் கத்தாரில் இருந்து திரும்பி வந்தவுடன் அவர்களுக்கு கார் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ் கார் இந்திய மதிப்பில் 10 கோடி ரூபாய் வரை விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like