1. Home
  2. தமிழ்நாடு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன ?

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா ? அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன ?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மசக்காளிபாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அரசு மீது அவதூறு பரப்பி வருகின்றனர். ஆதார் எண் இல்லை என்றாலும் தற்போது மின் கட்டணம் செலுத்தலாம். மின் கட்டண உயர்வை ஏற்று ஆதரவு தர வேண்டும்.

மின் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மேலும் தங்கள் மின் இணைப்புக்கான பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் விரைவில் நடைபெற உள்ளன. ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது. கண்டிப்பாக 100 சதவீதம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம்" எனக் கூறினார்.

Trending News

Latest News

You May Like