பிரபல பேக்கரி நிறுவனம் அசத்தல்!

பிரபல பேக்கரி நிறுவனம் அசத்தல்!
X

உலக கோப்பைக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதை முன்னிட்டு இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரிஸ் நிறுவனம் சார்பாக உலக்கோப்பைக் கால்பந்து போட்டியை கொண்டாடும் விதத்திலும், இன்றைய இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் விதத்திலும், கால்பந்து உலக கோப்பையை ஆளுயர கேக்காக வடிவமைத்து, ராமநாதபுரம் பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி முன்பு வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதை வாடிக்கையாளர்களும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள், மற்றும் வாகன ஓட்டிகள் இதனை ரசித்து செல்கின்றனர். வாடிக்கையாளர்கள் அங்கு நின்று செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.

இதுகுறித்து ஐஸ்வர்யா பேக்கரியின் உரிமையாளர் கூறியதாவது, உலக கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு இளைஞர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டும் வகையிலும், உலக கோப்பை வடிவிலான ஆளுயர கேக் செய்து பேக்கரி முன்பு வைத்துள்ளோம். இந்த கேக் 60 கிலோ சக்கரை, 240 முட்டையுடன் 85 கிலோ எடையில் ஐந்தரை அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேக்கை நான்கு மாஸ்டர்கள் இணைந்து 4 நாட்களாக வடிவமைத்துள்ளனர்.

இது ரசிகர்கள், வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

Next Story
Share it