1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் ஜெயிலுக்கு போவார் இபிஎஸ்.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி..!

விரைவில் ஜெயிலுக்கு போவார் இபிஎஸ்.. சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி..!

குட்கா ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஜெயிலுக்கு போவது உறுதி என்று, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. போதைப் பொருட்கள் விற்பனை அதிகரி்த்துவிட்டது என, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளி்த்துள்ளார்.


இந்நிலையில், இதற்கு பதிலளித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் எஸ்.ஆர்.பாரதி, "தற்போதைய திமுக ஆட்சியி்ல் தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார். ஆனால், தமிழகத்தில் போதைப் பொருட்களை வி்ற்பனை செய்பவர்களே பாஜகவினர்தான். அவர்களை தட்டிக்கேட்கும் தைரியம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதா..?.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என்பதை உணர்த்த எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் குட்காவை சட்டமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர். அத்ற்காக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்தது.


ஆனால், இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியில்தான் குட்கா ஊழல் எனும் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றது. இந்த ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அடங்கிய ஆவணமும் விசாரணை அமைப்பான சிபிஐ வசம் சிக்கி உள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தற்போது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. எனவே இந்த ஊழல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி விரைவில் ஜெயிலுக்கு போகப்போவது உறுதி" என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like