1. Home
  2. தமிழ்நாடு

அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அம்பானிக்கு கைமாறுகிறது..!

அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அம்பானிக்கு கைமாறுகிறது..!

இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலை, முகேஷ் அம்பானி வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அம்பானிக்கு கைமாறுகிறது..!

தலைநகர் டெல்லியின் அடையாளங்களில் ஒன்றான, பிரதமரின் இல்லத்துக்கு மிகவும் அருகிலுள்ள அசோக் ஹோட்டல் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்திய அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மிகப் பிரமாண்டமான 5 நட்சத்திர அந்தஸ்து கொண்ட அசோக் ஹோட்டலின் விற்பனை விலையாக 7,409 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டல் மட்டுமின்றி, இந்திய சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான மேலும் 7 ஹோட்டல்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், டெல்லியின் மையப்பகுதியில், 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என அனைத்தையும் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு நிதி திரட்டுவதற்கான திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


டெல்லியில் ஒரு 5 நட்சத்திர ஆடம்பர ஹோட்டலை வாங்க வேண்டுமென்ற ஆசை முகேஷ் அம்பானிக்கு பல காலமாக இருந்திருக்கிறது. இவர் சமீபத்தில் முதலீடு செய்த ஓபராய் குழுமத்தின் ஹோட்டலை முழுமையாக இவரால் கையகப்படுத்த முடியவில்லை. இச்சூழலில், டெல்லியில் விற்பனை செய்யப்படவுள்ள அசோக் ஹோட்டலை முகேஷ் அம்பானியே வாங்குவார் என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like