1. Home
  2. தமிழ்நாடு

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை கையில் எடுக்கும் என்ஐஏ!?

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை கையில் எடுக்கும் என்ஐஏ!?

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு தாக்குதல் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றில் திடீரென குக்கர் குண்டு வெடித்தது. ஆட்டோவில் பயணித்த ஷாரிக் என்ற நபரைப் பிடித்த போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.ஆர்.சி எனப்படும் இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற கத்ரி மஞ்சுநாத் கோயிலைத் தகர்க்க திட்டம் தீட்டப்பட்டதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கை கையில் எடுக்கும் என்ஐஏ!?

இத்தகவலின் உண்மை நிலை பற்றியும் சம்பந்தப்பட்ட அமைப்பு பற்றியும் கர்நாடக மாநில போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மங்களூரு ஆட்டோ வெடிகுண்டு தாக்குதல் விசாரணையை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக, மாநில உள்துறை அமைச்சர் அரகா ஜனேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like