மங்களூர் குண்டுவெடிப்புக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது..!!

மங்களூர் குண்டுவெடிப்புக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றது..!!
X

மங்களூருவில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் அந்த ஆட்டோவில் பயணித்த ஷாரிக், ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரிக், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், அவர் மங்களூருவில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் மங்களூரு குண்டுவெடிப்புக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் (ஐஆர்சி) என்ற அமைப்பு பொறுப்பேற்பு உள்ளது என கர்நாடகா காவல்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

இலக்கை அடையவில்லை என்றாலும் இதை வெற்றியாக கருதுகிறோம் என குறிப்பிட்டு கடிதம் எழுதி உள்ளனர்.காத்ரி மஞ்சுநாத் கோவிலை தாக்க இந்த அமைப்பு குறிவைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
Share it