ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!!

ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நிறுத்திவைப்பு!!
X

சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற மோதல் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையில் கலந்து கொள்ள 15 நாள் அவகாசம் கேட்டு ரூபி மனோகரன் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் மற்றொரு தரப்பான ரஞ்சன் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை மேற்கொள்ளும் வரை, ரூபி மனோகரன் தற்காலிகமாக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்துள்ள சஸ்பெண்ட் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்றும், இது இயற்கை நீதிக்கு எதிராக நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it